மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பெரிய சோலங்கந்தைக்கு செல்லும் வழியில் மக்கள் தரித்து நிற்க ஒரு பஸ் தரிப்பிடம் கூட இல்லாததால் அப்பகுதியில் இருந்து வரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயளர்கள்,பயணிகள், மழைகாலத்திலும்,வரட்சியான காலத்திலும் நிற்பதற்கு இடம் இன்றி பாரிய அசௌகரியங்களக்கு முகம் கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயமாக மஸ்கெலியா பிரதேச சபை முன்வந்து இவ்வாறு பஸ் தரிப்பிடம் இல்லாத பகுதிகளில் பஸ் தரிப்பிடம் அமைத்து கொடுக்க முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.