கொழும்பிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாடின்மையால் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஹட்டன் நுவெரலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் குறித்த கார் பின் பகுதியில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று  அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விபத்தில் காரில் பயணித்த மூவரில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம்  தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.