தான்சானியாவில் பஸ் ஒன்று லொறி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு  ஊடகம் தெரிவித்துள்ளது. 

குறித்த விபத்து தான்சானியாவின்  சோங்வே பகுதியில் குறித்த  விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சிறிய பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி  விபத்துக்குள்ளானதில் 15 பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

  இதன்போது 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.