மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழு உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முஹமட் நௌபர் அலி எனப்படும் கஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய சகாவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டிய - கொலன்னாவை பகுதியிலுள்ள சாலதுல்ல பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.