பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபா தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வழங்க வேண்டுமென அழுத்தங்களை கொடுத்து 1000ரூபா வியாபாரம் நாளை  24ம் திகதி பொகவந்தலாவ நகரில் காலை 10 மணிக்கு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர்.

1000ரூபா நாளாந்த கொடுப்பனவு கம்பனிகாரர்களுக்கு வழங்க முடியும் எனவும் தொழிற்சங்கங்கள் இணைந்து முதலாளிமார் சம்மேளனதுடன் 700 ரூபா சம்பளத்தை கொடுக்க முன்வந்துள்ளனர்.

அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல் வாதிகள் வரவுசெலவு திட்டத்தின் கொடுப்பனவாக தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுப்பதாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு எல்லாம் மாறாக பெருந்தோட்டமக்கள் பாரிய அளவில் ஒன்று திரண்டு அவர்களின் எதிர்ப்பை வெளிகாட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்,பௌத்த பிக்குகள் இப் போராட்டத்தில் பொகவந்தலாவ பிரதேச பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டு கெம்பியன் நகரில் இருந்து பேரணியாக பொகவந்தலாவ நகரை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை வெளிகாட்ட உள்ளதாகவும்,கருப்பு கொடிகளுடன் பதாதைகளை ஏந்திய வண்ணம் வெற்றி பெரும் நோக்கில் இப்போராட்டம் அமையுமென சிவில் அமைப்பின் அதிகாரியான எஸ்.டி. கனேசலிங்கம் தெரிவித்தார்.

இதனை ஏற்பாடு செய்யும் சிவில் அமைப்புகளும்,தொண்டு நிறுவனங்கள் அடங்களாக பெருந்தோட்ட மக்களும் பெருவாரியாக கலந்து கொண்டு நாளாந்த சம்பளம் 1000ரூபா வேண்டுமென போராட்டம் ஒன்றை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.