உலகிலேயே கிரிக்கெட் நிர்வாகத்தில் முன்னாள் வீரர்கள் தலையிடுவது இலங்கையில் மட்டும்தான் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமாமர் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியேரின் புதிய திட்டப்படி நீங்கள் செயற்படுவீர்கள என்று வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.