காலி-ரத்கமயில் கடத்தப்பட்டு தீ வைத்து கொலை செய்யப்பட்ட இரு வர்த்தகர்களின் உடல் எலும்கூடுகள் வலஸ்முல்ல- மெதகொடவில் மீட்க்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் மற்றும் 33 வயதுடையவரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடத்தப்பட்ட இருவரும் கொலைசெய்யபட்ட நிலையில் அவர்களின் எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.