(நா.தனுஜா)

ஞானசாரரை தேசிய ஒருமைப்பாட்டிற்கு பொறுப்பான அமைச்சர் மனோகணேசன் சந்தித்திருப்பதை நல்லிணக்கத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதற்கானதொரு அடிப்படையாகவே கருதுவதாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்தனர். 

இந்த சந்திப்பு தொடர்பில் வினவியபோதே பொதுபல சோனா அமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இந் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் இல்லை எனப் பலரும் கூறுகின்றனர். இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். 

எனினும் இதுவரை காலமும் கொள்கை வகுப்பாளர்களுடன் நேரிடையான தொடர்புகளை ஏற்படுத்தியிராத போதிலும், நல்லிணக்கத்தை நோக்கிய அடிப்படை வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம் எனவும் இதன்போது பொதுபல சேனா சுட்டிக்காட்டியது.