கொடவெஹர பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொடவெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலேகம பகுதியில் நேற்று ஹொடபரியாவ பாதுகாக்கப்பட்ட பகுதியில் புராதன வஷ்த்துக்களை கைப்பற்றும் நோக்குடன் அகழ்வூகள் இடம்பெறுவதாக கொடவெஹர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 52,40, 39, 29 வயதையுடையவர்கள் ஆவர். 

அத்துடன் புதையல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் பூசை பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.