(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொக்கைன் பாவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் உள்ளிட்ட முழுமையான தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, எனது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் விசாரணைகளெல்லாம் உண்மையை கண்டறிய உதவாது. இந்த விடயத்தில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொக்கைன் போதைப்பொருள் பாவிப்பதாக முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக  ஐக்கிய தேசிய கட்சியின் விசரணை குழுவுக்கு சென்று வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.