யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்ற மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் நகர   அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அவர் நாவற்குழி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, விகராதிபதி "வராப்பிட்டியே கவம்பதி’ தேரரிடம் ஆசிகளையும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்ட மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.