(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயகவிடம் பெற்ற வாக்குமூல அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த விசாரணை தொடர்பான மேலதிக காரணிகளை ஊடகங்களுக்கு கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொக்கைன் போதைப்பொருள் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக தெரிவித்த கருத்து குறித்து ஆராய ஐக்கிய தேசிய கட்சியினால் நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் கிரியெல்ல தல‍ைமையிலான குழுவினர் இன்று காலை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயகவிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறினார்.