நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.