வவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றிலேயே அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரால் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த உத்தியோகத்தரும் அவரது மனைவியும் குறித்த வங்கியிலேயே பணியாற்றி  வந்திருந்தனர். இந் நிலையில் குறித்த வங்கியில் பணியாற்றி வந்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக வாடிக்ககையாளர்களின் நிதிகளை தனது கணக்கில் வைப்பிளிட்டு வந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புகளில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றதாக தெரிவித்தும் குறித்த உத்தியோகத்தரே பணத்தை எடுத்துள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவத்துள்ளனர்.

இந் நிலையில் வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளை குறித்த வங்கியில் செவ்வன பார்த்து வருகின்ற நிலையில் பொலிஸிலும் முறைப்பாடுகளை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்