ஐ.எ.ஸ் இயக்கத்திலிருந்து மீண்டு வந்த ஹூடா முதானா தனது சொந்த நாடான அமெரிக்கா திரும்ப அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹூடா முதானா. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எ.ஸ் இயக்கத்தில் சேர்ந்தார். தற்போது ஐ.எ.ஸ்.டமிருந்து மீண்ட அவர், ஐ.எ.ஸ்.ஸிடம் சேர்ந்தது தவறுதான். எனது மகனுடன்  தனது தாய்நாட்டுக்குச் செல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

ஆனால், அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்க முடியாது என்று ட்ரம்ப் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கடந்த புதன்கிழமை ட்ரம்ப் கூறியதாவது,

நான்  வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், முதானாவை அமெரிக்காவுக்கு மீண்டும் அனுமதிக்கக் கூடாது என்ற எனது கருத்தை தெரிவித்துவிட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார் என்றார்.

இந்த நிலையில் இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ கூறும்போது, முதானா அமெரிக்கக் குடிமகள் இல்லை,அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை,நாங்கள் அவரை அமெரிக்காவில் அனுமதிக்க முடியாது.அவரிடம் அதிகாரபூர்வமான பாஸ்போர்ட் கூட இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால், முதானாவின் உறவினர்கள் அவர் அமெரிக்காவில்தான் பிறந்தார் என்றும் அவரிடம் முறையான பாஸ்போர்ட் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனினும்  அவரது பெற்றோர்களின் பிறந்த இடங்களை சுட்டிக் காட்டி இதனை ஏற்க அமெரிக்க அரசு மறுக்கிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.