கொழும்பில் 11  இளைஞர்களை கடத்தி அவர்களில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கடற்படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

காங்கேசன்துறை கடற்படை தளத்தை சேர்ந்த  கடற்படைவீரர் 2008-2009 இல் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை காவல்துறை பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் 2018 ஆகஸ்டில் நேவி சம்பத் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே மற்றொரு கடற்படை வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு உதவினார் என இலங்கையின் முப்படைகளின் பிரதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.