இந்தியாவில் பெண்ணொருவர் பொது கழிப்பறையில் தங்கி வசித்து வருகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் லஷ்மி தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவரோடு வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் தனது இரு மகள்களும் திருமணம் செய்து கொண்ட பின்னர் மகனோடும் தனது கணவரோடு வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் லஷ்மியின் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் தனது பழைய வீட்டில் லஷ்மி தனியாக தங்கி வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், குறித்த பெண்ணின் வீடு  பழுதடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

குறித்த வீட்டை பழுது பார்ப்பதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் சில காலமாக பொது கழிப்பறையில் தங்க வேண்டிய  நிலைக்கு லஷ்மி தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறியளவில் உள்ள கழிப்பறையில் அவர் தங்கி பொதுவெளியில் உணவு சமைத்து உட்கொண்டு வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.