ஒருதொகை கஞ்சா போதைப்பொருளை பயண பொதியில் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் டுபாய்க்கு கடத்த முற்பட்ட பெண்ணொருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கண்டி அக்குரணை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். 

சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே மேற்படி பெண் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 94 கிராம் கஞ்சாவின் பெறுமதியானது 8,37,000 ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு  அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.