“ஸ்மார்ட்” கையடக்க தொலைபேசி பயன்படுத்த ரஷ்ய இராணுவத்தினருக்கு தடை

Published By: R. Kalaichelvan

22 Feb, 2019 | 10:17 AM
image

ரஷ்யாவில் இராணுவ வீரர்கள்  முகநூல்,டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடைசெய்யவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. 

இதனால் இராணுவம் குறித்த இரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இராணுவ வீரர்கள் “ஸ்மார்ட்” கையடக்க தொலைபேசி  பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென இராணுவ அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அந்த வகையில் இராணுவ வீரர்கள் “ஸ்மார்ட்” கையடக்க தொலைபேசி  பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா பாராளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களில் 400 க்கும் மேற்பட்டோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

எனினும் இந்த மசோதா பாராளுமன்ற மேல்சபையிலும், கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும்.அதனை தொடர்ந்து அதிபர் புதின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரும்.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கேமரா, இணையதளம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட “ஸ்மார்ட்”கையடக்க தொலைபேசி  மட்டும் இன்றி  மடி கணினி உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த இராணுவ வீரர்களுக்கு தடைவிதிக்கப்படும். அத்துடன் அவர்கள் இராணுவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசவும், எழுதவும் தடை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17