கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப் பாடசாலையின் ஆபத்தான நிலையில் காணப்படும்  மதில் சுவரை அகற்றி புதிய சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரத்திற்கு அண்மையில் உள்ள முதன்மையான பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற முரசுமோட்டை முருகானந்தா ஆரம்பப்பாடசாலையின் முன்பக்க மதில் சுவர் ஆபத்தான நிலையில காணப்படுவதுடன், இதில் ஒரு பகுதி மதில் கடந்த இடிந்துவீழ்ந்துள்ளது.

இதேவேளை எஞ்சியிருக்கின்ற மதிலும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

இதைவிட, குறித்த பாடசாலையில் காணப்படுகின்ற பழமையான கட்டடம் ஒன்றும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.ஆகவே ஆபத்து நிலையில் காணப்படுகின்ற மதில் சுவரை அகற்றி புதிய சுவர் ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.