வீதி புனரமைப்பின் போது கந்தமுருகேசனாரின் சிலையை சந்தியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைத்து அதன் மையப்பகுதியில் வைக்குமாறு பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் கி.ஜெயபாலன் பிரதேசசபை தவிசாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது AB 31 எனும் இலக்கமுடைய புலோலி-கொடிகாமம்-கச்சாய் வீதி அகலமாக்கப்பட்டு காபற் வீதியாக மாற்றும் பணிகள் இடம்பெற்று வருகிறது.

பருத்தித்துறை பிரதேசசபையின் கீழ் உள்ள ஏற்கனவே காபற் வீதியாக உள்ள AB 20 பருத்தித்துறை- யாழ்ப்பாணம் வீதியும்,  B 75 புலோலி- சாவகச்சேரி வீதியும் இணையும் சந்தியில் அறிஞர் கந்தமுருகேசனாரின் உருவச்சிலை உள்ளது .

எனவே இனி அமையப் போகும் சந்தியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைத்து சிலையை யாழ்ப்பாணம் பார்க்கக் கூடியவாறு மையத்தில் வைப்பதனால் அந்த பிரதேசத்தின் பொழிவையும், அழகையும் அதிகரிப்பதோடு கந்தமுருகேசனாரை நாம் கௌரவப்படுத்துவதுடன்,  வீதி விபத்துக்களை குறைப்பதாகவும் அமையும் என அக்கடிதத்தினை பிரதேசசபை தவிசாளருக்கு எழுதியுள்ள அதே வேளை அதன் பிரதிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர் யாழ்ப்பாணம்  ,  வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் பருத்தித்துறை,  நிறைவேற்று பணிப்பாளர் மகா நிறுவனம் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.