நுவரெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாவெலிய சிட்டி சந்தியில் உள்ள வீடொன்றிலிருந்து 200g கேரளா கஞ்சா உடன் 32 வயதுடைய இளைஞர் ஒருவர் நுவரெலிய பொலிஸாரால் இன்று (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட இளைஞன் நாளை(22)  நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சில இளைஞர்கள் இருப்பதாக கைது செய்யப்பட்ட இளைனால் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை நுவரெலிய பொலிஸாரின் விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.