இன்று ஆரம்பமாகிறது ஐ.பி.எல்.

Published By: Priyatharshan

09 Apr, 2016 | 10:10 AM
image

இந்­திய கிரிக்கெட் சபை­யினால் நடத்­தப்­பட்­டு­வரும் ஐ.பி.எல். இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு முதன் முதலில் அறி­முகம் செய்­யப்­பட்­டது. ஆண்­டு­தோறும் இந்தப் போட்டி நடந்து வரு­கி­றது.

இது­வரை 8 போட்டித் தொடர்கள் நடை­பெற்­றுள்­ளன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் (2010, 2011), கொல்­கத்தா நைட்­ரைடர்ஸ் (2012, 2014), மும்பை இந்­தியன்ஸ் (2013, 2015) ஆகிய அணிகள் தலா 2 முறையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), அணிகள் தலா 1 தட­வையும் ஐ.பி.எல். கிண்­ணத்தைக் கைப்­பற்­றி­யுள்­ளன.

9 ஆவது ஐ.பி.எல். போட்டி இன்று தொடங்­கு­கி­றது. எதிர்­வரும் மே மாதம் 29ஆம் திகதி வரை 51 நாட்கள் இந்த ஐ.பி.எல். திரு­விழா நடை­பெ­ற­வுள்­ளது.

ஆட்ட நிர்­ணய சூதாட்ட விவ­கா­ரத்தில் சிக்­கிய சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணி­க­ளுக்கு தலா 2 ஆண்­டுகள் தடை விதிக்­கப்­பட்­டது. இந்த 2 அணி­க­ளுக்கு பதி­லாக ரைசிங் புனே சுப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் இந்தப் போட்­டியில் விளை­யா­டு­கின்­றன.

நடப்பு சம்­பியன் மும்பை இந்­தியன்ஸ், முன்னாள் சம்­பியன் கொல்­கத்தா நைட் ரைடர்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்­களூர்இ டெல்லி டேர்­டெவில்ஸ்இ கிங்ஸ்­லெவன் பஞ்சாப், சன்­ரைசர்ஸ் ஹைத­ராபாத் ஆகி­ய­வற்­றோடு இந்த இரண்டு புதிய அணி­க­ளையும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் பங்­கேற்­கின்­றன.

ஒவ்­வொரு அணியும் மற்ற அணி­க­ளுடன் உள்ளூர்இ வெளியூர் என 2 முறை மோத வேண்டும். அதன்­படி ஒவ்­வொரு அணிக்கும் 14 போட்­டிகள் இருக்கும். லீக் முடிவில் புள்­ளிகள் அடிப்­ப­டையில் முதல் 4 இடங்­களை பிடிக்கும் அணிகள் பிளே ஓப் சுற்­றுக்கு முன்­னேறும். மே 22 ஆம் திகதி வரை லீக் ஆட்டம் நடை­பெறும்.

பிளே ஓப் சுற்றில் முதல் 2 இடங்­களை பிடிக்கும் அணிகள் குவாலி பையர் – 1 இல் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்­டிக்கு தகுதி பெறும். 3ஆவதுஇ 4ஆவது இடங்­களை பிடிக்கும் அணிகள் எலி­மி­னேட்­டரில் (வெளி­யேற்­றுதல்) மோதும். இதில் தோற்கும் அணி வெளி­யேற்­றப்­படும். வெற்றி பெறும் அணியும்இ குவாலி பையர் – 1 இல் தோற்கும் அணியும் குவா­லி­பையர் –2 இல் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்­டிக்கு நுழையும் மற்­றொரு அணி­யாக இருக்கும்.

கடந்த 8 ஆண்­டு­க­ளாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளை­யா­டிய டோனி தற்­போது புது­முக அணி­யான ரைசிங் புனே அணிக்கு தலை­வ­ராக செயற்­ப­டு­கிறார். சென்­னையை போலவே புனே அணி­யையும் முன்­னேற்ற பாதைக்கு அவர் கொண்டு செல்­வாரா என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

டோனியை போலவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் 8 ஆண்­டுகள் ஆடிய ரெய்னா குஜராத் லயன்­ஸுக்கு தலை­வ­ராக உள்ளார். இந்த 2 புதிய அணி­களும் தங்­க­ளது முதல் ஐ.பி.எல். தொட­ரி­லேயே அசத்­துமா என்­பது இந்த இரு­வ­ரது கைகளில் இருக்­கி­றது.

இறுதிப் போட்­டிக்கு 2 முறை தகுதி பெற்றும் ஐ.பி.எல். கிண்­ணத்தை வெல்­லாத பெங்­களூர் அணி இந்த முறை­யா­வது சம்­பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற வேட்­கையில் உள்­ளது. அந்த அணித் தலைவர் விராட் கோஹ்லி 20 ஓவர் போட்­டி­களில் மிகவும் நல்­ல­நி­லையில் உள்ளார்.

கம்பீர் தலை­மை­யி­லான கொல்கத்தா நைட்­ரைடர்ஸ் 

ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான மும்பை இந்­தியன்ஸ் அணிகள் 3ஆவது முறை­யாக கிண்­ணத்தை வெல் லும் ஆர்­வத்தில் உள்­ளன.

சாஹிர் கான் தலை­மை­யி­லான டெல்லி அணிஇ மில்­லரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்இ வோர்­னரின் சன்­ரைசர்ஸ் ஹைத­ராபாத் ஆகி­யவை முதல் முறை­யாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.

மும்பை வான்கடே மைதானத் தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் –- ரைசிங் புனே அணிகள் இரவு 8 மணிக்கு மோதுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35