வெள்ளப் பாதிப்பினையடுத்து தென்னிலங்கையில் பௌத்த துறவிகளால் மாணவர்கள் மற்றும் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று  கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு பாடசாலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் பௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு பாடசாலையில் கல்வி கற்கின்ற சுமார் 300 மாணவர்களுக்கும் கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது குறித்த பௌத்த துறவிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடசாலைகள் மற்றும் சமூகத்திடம் கேசரிக்கப்பட்ட பொருட்களையே இன்று மாணவர்களிடம் கையளித்தனர்.

இந் நிகழ்வில் பௌத்த துறவிகள் கற்கை நிலையத்திலிருந்து  முப்பதுக்கும் மேற்பட்ட துறவிகள், கல்வி அமைச்சின் பௌத்த பிரிவுக்கான பணிப்பாளர் விஜித ஹெலகெதர கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் சேவை கால ஆசிரியர் ஆலோசகர் திருக்குமார்.ஆங்கில ஆசிரிய ஆலோசகர் சிவஞானம், பாடசாலையின் அதிபர் சுதாஸ்கரன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.