(நா.தினுஷா)

இலங்கை துறைமுக வேலைத்திட்டங்கள் மற்றும் துறைமுக வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான விசேட செய்தி தொகுப்புகளை வழங்கும் புதிய இணையத்தளமொன்றை இலங்கை துறைமுக அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டின் கீழ் இயங்கும் news.@slpa.lk எனும் இந்த இணையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றதுடன் அமைச்சர் சாகல ரத்னாயக்க இந்த இணையத்தளத்தளத்தை மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து வைத்தார்.

இந்த இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பராக்கிரம திஸாநாயக்க, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க, முகாமைத்துவ அதிகாரி கபிதான் அதுல ஏவாவிதாரன உள்ளிட்ட துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

மேலும் துறைமுகம் தொடர்பான செய்திகள், சர்வதேசத்துடனான துறைமுக தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட செய்தி தொகுப்புகளை பெறுமதிமிக்கதாகவும், சரியானதாகவும் ,நம்பிக்கையுடைய முறையில் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.