(ஆர்.விதுஷா)

பாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான " அல ரஞ்சித் " கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில வைத்து இன்று வியாழக்கிழமை முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

இதன் போது சந்தேக நபரான 57வயதுடைய அல ரஞ்சித் எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து  ஒரு தொகை ஹெரொயின் போதைப்பொருளும் , இரண்டு வாள்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதே வேளை , சந்தேக நபர் தொடர்பில் கப்பம் பெறும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு