(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அரசியலமைப்பு பேரவையில் குறைபாடுகள் இருந்தால் அதனை திருத்திக்கொண்டு நீதிமன்ற சுயாதீனத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பேரவை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.