(ஆர்.விதுஷா)

அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோர் வெலிகடை சிறைச்சாலை வைத்திய சாலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்தனர்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கோரி பொது பலசேனா அமைப்பினால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இதன்போது ஜனாதிபதி கொலை சதி விகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் துமிந்த சில்வா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.