இன்றைய சூழலில் எம்மில் பலரும் சைகிளில் பயணம் செய்து அலுவலகம் சென்று வருகிறோம். மோசமான சாலை பராமரிப்பின் காரணமாக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும்போது, எம்முடைய கழுத்து எலும்பானது தொய்வு ஏற்பட்டு, கழுத்து வலியாக வெளிப்படுகிறது. 

கழுத்து வலி தாங்க முடியாத போது நாம் வைத்தியரை அணுகி நிவாரணம் தேடுகிறோம்.

அவர் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் தொய்வு காரணமாகவும், கழுத்தின் மூட்டு பகுதி மற்றும் பின் முதுகு வரை பலருக்கு நாட்பட்ட தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. கழுத்து பகுதிக்கு பணிச்சுமை அதிகம் கொடுப்பதால் காரணமாக இத்தகைய வலி உருவாகிறது. 

ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் நின்று வேலை செய்வதாலும், சிலருக்கு எலும்பின் வளர்ச்சி அதிகமாக இருப்பதாலும் இதுபோன்ற கழுத்து வலி ஏற்படக்கூடும். சிலருக்கு கூடுதல் அழுத்தம் காரணமாகவும், மரபியல் காரணமாகவும் இத்தகைய பிரச்சனை ஏற்படலாம்.

கழுத்து எலும்பு தேய்மானம் முதல் கட்டத்தில் இருக்கும் போது அதன் அறிகுறி தெரிவதில்லை. தீவிரமான கழுத்து வலி ஏற்படும் போது சிலருக்கு தலைசுற்றலும் ஏற்படலாம். சிலருக்கு தோள்பட்டையை சுற்றி வலி ஏற்படலாம். எழுந்து நிற்கும் போதும், சம்மணமிட்டு பசியாறுவதற்கு உட்காரும் போதும் அல்லது இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போதும் வலி உருவாகும். சிலரால் இந்த வலியை கூட தாங்க இயலாது.

அதேபோல் சிலர் கழுத்தை பின்னோக்கி அல்லது பக்கவாட்டில் திரும்ப வேண்டிய சூழலிலும் மிகவும் சிரமப்பட்டு திரும்புவார்கள். தலையின் பின் பகுதியில் முகுளம் இருக்கும் பகுதியில் அதாவது முதுகு தண்டுவடம் தொடங்கும் இடத்தில் தீவிரமான வலி உணர்வு இருக்கும். இதையெல்லாம் அறிகுறியாக எடுத்துக் கொண்டு உடனடியாக கழுத்து மற்றும் எலும்பு மூட்டு வைத்தியரை சந்தித்து நிவாரணமும் பெற வேண்டும்.

அவர் உங்களை பரிசோதித்து விட்டு, எலக்ட்ரோமையோகிராம் என்ற பரிசோதனையை செய்து வருமாறு பரிந்துரைப்பார். இந்தப் பரிசோதனையின் முடிவில் கழுத்து பகுதிக்கான நரம்புகள் எந்த இடத்தில் எம்மாதிரியான சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து அதற்கு ஏற்ற மருந்து மாத்திரை வலிப்பு சிகிச்சை மற்றும் இயன்முறை வைத்தியம் முதலியவற்றை வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த சிகிச்சையிலும் வலி குறையவில்லை என்றால் சிலருக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்து அதன் பிறகு அறுவை சிகிச்சையை செய்துகொள்ள பரிந்துரைப்பர்.

எதனால் கழுத்து வலி ஏற்படுகிறது என்பதை அறிந்து அந்த பணியை தொடர்ந்து செய்வதிலிருந்து விடுபடவேண்டும். அத்துடன் அந்த நரம்புகளின் ஊட்டத்திற்காக இயன்முறை வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். அப்படி செய்யும் போது, பாதிக்கப்பட்ட நரம்புகள் மீண்டும் புத்தாக்கம் பெறலாம்.

டொக்டர் ராஜ்கண்ணா

தொகுப்பு அனுஷா.,