(நா.தினுஷா)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொழும்பு துறைமுகத்தின் வடக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படை விடயங்கள தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் துறைமுத்தின் தெற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்றுவருவதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

மேலும் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் தெற்கு முனைய அபிவிருத்தி பணிகளோடு இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் 3 கப்பல்களை நிறுத்துவதற்கான வசதிகளை உருவாக்குவது குறித்து துறைமுக அதிகாரசபையின் பரிந்துரைகள் கிடைத்தவூடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.