(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் உள்ள இந்த மோசமான அரசியல் அமைப்பு பேரவையை நீக்கிவிட்டு எமது ஆட்சியில் சுயாதீனமாக அரசியல் அமைப்பு பேரவையை உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசியல் அமைப்பு பேரவை தவறிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க என்ன சட்ட முறைமைகள் உள்ளது? அரசியல் அமைப்பு சபையின் உறுப்பினர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களை எவ்வாறு நீக்குவது? அரசியல் அமைப்பில் எங்கு இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு வழிமுறை இல்லையென்றால் அரசியல் அமைப்பு பேரவையை எவ்வாறு நீக்குவது. ஆகவே அதற்காக சட்ட விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு பேரவை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.