(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை   பேணப்பட வேண்டுமாயின் அரசியலமைப்பு பேரவை முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்திற்கு இன்று இடம்பெற்ற மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

தகுதியுடையவர்கள் அரசியலமைப்பு பேரவையினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர், சபாநாயகர், எதிர் கட்சி தலைவர்,  மற்றும் இவர்களினால் சிபாரிசு செய்யப்படுகின்ற உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவை கொண்டுள்ளது. 

இவ்வாறு அரசியல்வாதிகளை மையப்படுத்தி உறுப்பினர்களின் தெரிவு இடம் பெறும் பட்சத்தில் அங்கு சுயாதீனத்தன்மை காணப்படும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.