மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர் யாழ் புகையிரத வீதி முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ் நீதி மன்ற தொகுதிக்கு முன்பாக அமையவுள்ள யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்ல்லை நாட்டி வைத்ததுடன் பின்னர் தூர சேவை பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமித்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ்.மாவட்ட அரசாங்கஅதிபர் வேதநாயகன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் தவிசாளர்கள் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.