(நா.தனுஜா)

இலங்கை விமானப்படையினார் வருடாந்தம் நடத்தப்படும் 'விமானப்படை தினம்" 68 ஆவது முறையாக இவ்வருடமும் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஹிங்குரன்கொட விமானப்படைத் தளத்தில் நடைபெறவுள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் ஜிஹான் செனெவிரத்ன தெரிவித்தார்.

ஹிங்கரன்கொட விமானப்படைத் தளத்தில் ஆரம்பமாகவுள்ள இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெறும்.

அதனைத்தொடர்ந்து அன்றைய தினம் விமானப்படையின் விசேட கண்காட்சி நிகழ்ச்சி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறும். 

அங்கு விமானப்படைக்குரிய பிரத்யேக விடயங்கள் காட்சிப்படுத்தப்படும். பொதுமக்கள் அனைவரும் வருகைதந்து இலவசமாகப் பார்வையிட்டுச் செல்லக்கூடிய வகையில் கண்காட்சி எற்பாடு செய்யப்பட்டுள்ளது.