முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில் ஜனாதிபதியின் கிராம சக்தி மக்கள் செயற்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மல்லாவி துணுக்காய் முதன்மை வீதியில் ஒன்றுகூடிய கிராம மக்கள் முன்மை வீதிஊடாக மங்கை குடியிருப்பு நோக்கி போதைபொருள் பாவனைக்கு எதிரான வசாகங்கள் தாங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்பு பேரணியினை முன்னெடுத்துள்ளார்கள்.

மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பு கிராம அலுவலகம் வரை சென்றடைந்த இந்த பேரணியில் மல்லாவி கிராம அலுவலகர் திருமதி.றாஜினி,துணுக்காய் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.தாரகை,மல்லாவி பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரி திரு.அரவிந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளதுடன் போதைப்பொருள் பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு கருத்துக்களையும் வழங்கியுள்ளார்கள்.