இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சாமி சில்வா, 2019 முதல் 2021 ஆண்டு வரை தலைவராக செயல்படுவார்.

இன்று விளையாட்டுத் துறை அமைச்சில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலில் சாமி சில்வா வெற்றிபெற்றார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சாமி சில்வா 83 வாக்குகளை பெற்ற நிலையில் ஜெயந்த தர்மதாச 56 வாக்குகளை பெற்றார்.

இந்நிலையில் சாமி சில்வா 27 மேலதிக வாக்குளால் சாமி சில்வா வெற்றிபெற்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, ரவின் விக்ரமரத்ன 82 வாக்குகளையும் கே. மதிவாணன் 80 வாக்குகளையும் பெற்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உபதலைவர் பதவிக்காக போட்டியிட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க 72 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பதவிக்காக போட்டியிட்ட மொஹான் டி சில்வா 96 வாக்குகளைப் பெற்று செயலாளராக தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட நிசாந்த ரணதுங்க 45 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.