இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய செய்மதியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்மதிக்கு இராவணா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர்சிகிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. பொறியியலாளர் தரிந்துதயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து வடிவமைத்திருந்தார்கள்.