புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. 

இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் புல்வாமா பகுதியில் குறித்த அமைப்பினால் இந்திய துணை இராணுவ வீரர்கள் மீது  நடத்தப்பட்ட  தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.