தற்பொழுது அறுவடை செய்ய்பபடுகின்ற நெல்லினை சம்பா ரூபா 41 ஆகவும், நாடு ரூபா 38 வீதமும் நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் தமது நெல்லினை விற்பனை செய்வதற்காக தங்கள் உரத்தினைப் பெற்றுக்கொண்ட கமநலசேவை நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு விவசாயிகள் வேண்டப்படுகின்றார்கள்.

கொள்வனவிற்கான கொடுப்பனவானது மறுநாளே மாவட்டச் செயலகத்தினால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிடப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.