பங்களாதேஷில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் பரிதாபகரமாக சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் சாவ்க்பஜார் பகுதியில் உள்ள குடியிருப்பொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 

மேற்படி அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இரசாயன பண்டகசாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் பண்டகசாலையில் ஏற்பட்ட தீ விபத்து, வேகமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. 

இதானால் இந்த தீ விபத்தில் சிக்கி 69 பேர் பலியாகியுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால், மேலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  

காஸ் சிலிண்டரில் தீ பற்றி இந்த விபத்து நிகழ்ந்து இருக்கக் கூடும் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.