(ப.பன்னீர்செல்வம்)

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 60 ஆவது ஆண்டு விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம்  இசைக்கப்பட்டது.

கொழும்பில் இன்று வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 60 ஆவது ஆண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்,  அவரது ஆதரவு அணியை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவில்லை. 

ஆனால் அந்த அணியின் எம்.பி.க்களான ரோஹித அபேகுணாவர்தன, முன்னாள் எம்.பி.யான பண்டுபண்டாரநாயக உட்பட மஹிந்த அணி ஆதரவாளர்கள் சிலர் கலந்து கொண்டாதை காணக்கூடியதாகவிருந்தது. 

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை 1956 இன் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவின் சுதந்திர வெற்றியின் மக்கள் புரட்சி என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 60 ஆம் ஆண்டு வருடாந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க, முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்   செயலளாருமான மஹிந்த அமரவீர உட்பட  அமைச்சர்கள், ஆளுநர்கள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பல கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பதாக மாநாட்டு மண்டபத்தில் முன்பாக உள்ள பண்டாரநாயக மற்றும் சிறிமாவோவின் உருவச்சிலைகளுக்க மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அதன்பின்னர் ஜனாதிபதியினால் பண்டாரநாயக தொடர்பான புகைப்படக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பண்டரநாயக தொடர்பான ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. அத்தோடு விசேட முத்திரையொன்றும் தபால் அமைச்சர் ஹலீமினால் வெ ளியிடப்பட்டு ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்து. 

பண்டாரநாயக தொடர்பான சொற்பொழிவுகளை பேராசிரியர்களான ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, சரத் விஜேயசூரிய ஆகியோர் நிகழ்த்தினர். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை. 

நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்னதாக சிங்களத்திலும் அதனையடுத்து தமிழிலும் காணொளி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.