புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எஸ். வெடிகுண்டை பாகிஸ்தான் இராணுவம் வழங்கியுள்ளது என இந்திய உளவுத்துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்களையோ, உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். 

இதற்கிடையே லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி மசூத் அசாரை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் இராணுவமும், உளவுத்துறையும் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அவர்கள் சர்வதேச பார்வையில் படுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்கிறது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அங்கு சுதந்திரமாக சுற்றிவருகிறான், மேலும் அரசியல் கட்சியையும் தொடங்க முற்படுகிறான். 

இந்நிலையில் புல்வாமாவில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எஸ் வெடிகுண்டு பாகிஸ்தான் ராணுவம் வழங்கியது என இந்திய உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பாகிஸ்தானின் இராணுவ தலைமையகமாக ராவல்பிண்டியில்தான் ஆர்.டி.எஸ் வெடிகுண்டு ஜெய்ஷ் பயங்கரவாதிகளிடம் அந்நாட்டு இராணுவம் வழங்கியுள்ளது என தெரியவந்துள்ளது.