இந்தியா  டெல்லியில் நூறு ரூபாய் தொலைந்த வேதனையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள கல்யான் புரியை சேர்ந்தவர் சிவம் என்ற 18 வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலைச்செய்துள்ளான் குறித்த இளைஞன்  அந்த பகுதியில் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் அந்த பகுதியில் திருமண நிகழ்வில் வேலைச்செய்த  குறித்த இளைஞன் வேலை செய்தற்காக அவருக்கு சம்பளமாக ரூபாய் 300 கிடைத்ததில் நூறு ரூபாய் அவர் தொலை விட்டதாக கூறப்படுகிறது.

தொலைந்த ரூபாயை பல மணி நேரம் தேடியும் கிடைக்காதமையால் மன வேதனை அடைந்த குறித்த இளைஞன் சோகமாக வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவரது தந்தை அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் மேற்கொண்ட  விசாரணையில்  குறித்த இளைஞன் 100 ரூபாய்  தொலைத்துவிட்ட வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது.