உங்களில் யாருக்கேனும் அடிக்கடி பார்வைத் திறனில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது பார்வையில் கரும் புள்ளிகள் அல்லது மிதப்பது போன்ற உணர்வு தோன்றினாலோ அல்லது காலையோ ,மாலையோ நீங்கள் பார்க்கும் காட்சி தெளிவற்றதாக இருந்தாலோ அதாவது காட்சிகளில் ஆங்காங்கே வெற்றிடமோ, கருவட்டமோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ தோன்றுவது போல் இருந்தால், உங்களுக்கு டயாபடிக் ரெட்டினோபதி எனப்படும் பிரச்சனையின் தொடக்கம் ஏற்பட்டுவிட்டது எனலாம்.
இந்த பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கண் வைத்தியரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதிலும் உங்களுடைய வயது 35 ஐ கடந்துவிட்டால் ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி ஆண்டுதோறும் மறவாமல் கண் வைத்தியரை சந்தித்து, கண்ணை பரிசோதித்து கொள்ளுங்கள்.
கண்ணில் உள்ள விழித்திரையை அதாவது ரெட்டினாவை ஒட்டி நுண்ணிய ரத்தக் குழாய்கள் இருக்கின்றன. இந்த குருதிக் குழாய்கள் பாதிக்கப்படுவதால், இயல்பாக இயங்கும் ரத்த ஓட்டம் குறைகிறது அல்லது பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த நுண்ணிய நரம்புகளின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படலாம். அத்துடன் பார்வைத் திறனில் மாற்றம் ஏற்பட்டு, பார்வை திறன் குறையத் தொடங்குகிறது.
இது காட்ராக்ட் என்ற பாதிப்பு அல்ல அதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு, இரண்டு வகையில் ரெட்டினா எனப்படும் விழித்திரையை பாதிக்கிறது. அதனை மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமென்றால், Non proliferative retinal disease மற்றும் proliferative retinal disease என இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். இந்த இரண்டிலும் சரியான தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படுவது உறுதி. இதற்கு தற்பொழுது லேசர் சிகிச்சைகள் அறிமுகமாகியிருக்கின்றன. இந்த லேசர் சிகிச்சைகள் வெற்றிகரமாக பலன் அளித்து வருகின்றன.
டொக்டர் பிரசாந்த்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM