மஸ்கெலியா பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், நீர்தேக்கத்தில் பாய்ந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக இளைஞனின் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை இரவு குறித்த இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அழைப்பு வந்த பிறகு குறித்த இளைஞன் வெளியில் சென்றதாகவும், வெளியில் சென்ற இளைஞனை காணவில்லை என பதிவு செய்யப்பட்ட முறைபாட்டிலிருந்து, தெரியவந்துள்ளதோடு குறித்த இளைஞனின் பாதணி ஒன்று மவுசாக்கலை நீர் தேக்கத்திற்கு அருகாமையில் கிடந்ததை இளைஞனின் உறவினர்கள் இணங்கண்டுள்ளனர்.  

இதனையடுத்தே, குறித்த இளைஞன் நீர் தேக்கத்தில்  பாய்ந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞன் 30வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே என்ற திருமணமாகாத இளைஞன் என்பது குறிப்பிடதக்கது. 

இந்நிலையில், குறித்த இளைஞனை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடி வருவதாக தகவலகள் கிடைக்கப்பெற்றுள்ளன