தெனியாயை பகுதியில் இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தெனியாயை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலவெனிகம பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாவுல்தெனிய - கொலவெனிகம பகுதியைச் சேர்ந்த 57, 47 வயதுடையவர்களே இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.