குருணாகலை பகுதியில் மிகவும் சூக்சமமான முறையில் வாடகைக்காக வாகனங்களை பெற்று கொண்டு அவற்றை திருப்பி கொடுக்காமல் விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் பொலிசாரின் தொடர்ச்சியான தேடலின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முறைப்பாடுகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து தேசிய அடையாள அட்டைகள் இரண்டும், போலி சாரதி அனுமதி பத்திரமொன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குபுக்வௌ - மாஹவ பகுதியைச்சேர்ந்த 38 வயதுடைய எனப்படுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.