கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் 41 ஆவது நவம் மகா பெரஹெர நேற்றிரவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பமானது.

கங்காராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, சமய கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் சம்பிரதாய முறைப்படி பெரஹெரவை ஆரம்பித்து வைத்தார். 

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, 

நாட்டின் கலாசாரத்திற்கு சவால் விடுக்கப்பட்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் பெரஹெரக்கள் எமது நாட்டின் கலாசார தனித்துவத்தை எடுத்துக்காட்டும் முக்கிய அம்சமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த பெரஹெரவுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் தற்போது நோய் வாய்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கங்காராமையின் விகாராதிபதி கலகொட ஞானிஸ்ஸர தேரரின் நீண்ட ஆயுளுக்காகவும் அவர் விரைவில் குணமடைவதற்காகவும் தான் பிரார்த்தித்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கங்காராம விகாராதிபதி சங்கைக்குரிய பேராசிரியர் கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் நிர்வாக சபைத் தலைவர் ரஞ்சித் விஜேவர்த்தன, அமைச்சர்களான ருவன் விஜேவர்த்தன, சாகல ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.