இலங்கையின் முன்னணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கற்கைகளுக்கான பல்கலைக்கழகமாக திகழும் IIT, தமது InfoSchol திட்டத்தினூடாக 100 க்கும் அதிகமான முழு அனுசரணையுடனான புலமைப்பரிசில்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Informatics குரூப்பின் ஸ்தாபகரும் தலைவருமான கலாநிதி. காமினி விக்ரமசிங்கவின் சிந்தனை வெளிப்பாடாக அமைந்துள்ள InfoSchol,  நாடு முழுவதையும் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு முன்னணி நிறுவனமொன்றில் தொழில் பயிற்சியை பெற்றுக் கொள்ளும் அதேவேளை, 100 வீத அனுசரணையுடனான பட்டத்தை ஐக்கிய இராஜ்ஜியத்தின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பை வழங்குகிறது.

விண்ணப்பதாரிகளுக்கு IIT இனால் பிரித்தானியாவின் Westminster பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும் பரந்தளவு கற்கைகளிலிருந்து தெரிவு செய்து கொள்ளக்கூடிய வசதி காணப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கற்கைகளில் BEng (Hons) Software Engineering, BSc (Hons) Computer Science, BSc (Hons) Business Information Systems and BA (Hons) Business Management பட்டப்படிப்புகள் போன்றன அடங்கியுள்ளன. இந்த பட்டப்படிப்புகள் பகுதி நேர கற்கைகளாக அமைந்துள்ளதுடன், 5 ஆண்டு காலப்பகுதி வரை அமைந்திருக்கும். 

இக்காலப்பகுதியில், IIT இனால் தம்முடன் கைகோர்த்துள்ள நிறுவனங்களில் InfoSchol மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு உதவிகள் வழங்கப்படும்.

5 வருட பட்டப்படிப்பை பூர்த்தி செய்த InfoSchol மாணவர்கள் தமது பயிலும் காலப்பகுதியில் கற்கை பதிவுக் கட்டணம், வகுப்பு கட்டணங்கள், பல்கலைக்கழக கட்டணங்கள் மற்றும் பரீட்சை கட்டணங்கள் போன்றவற்றில் சுமார் 1.7 மில்லியன் ரூபாவை சேமித்துக் கொள்ள முடியும். கற்கையை ஆரம்பிக்கும் முன்னதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 3 மாத காலப்பகுதிக்கான அறிமுக திட்டமொன்றையும் IIT முன்னெடுக்கும். மேலும், தொழில் புரியும் 5 வருட காலப்பகுதியில்ரூபவ் நிறுவனத்திலிருந்து அவர்களுக்கு சகாயமான கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்படும் அத்துடன் தாம் பயிலும் கற்கையுடன் தொடர்புடைய தொழில்சார் அனுபவத்தையும் அவர்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 5 வருட பணி அனுபவத்துடன் அவர்கள் தமது கற்கையை பூர்த்தி செய்த பின்னர்ரூபவ் முழு நேர கற்கையை தொடர்பவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கு பெருமளவு அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 5 வருட காலப் பகுதியின் நிறைவில், மாணவருக்கு மொத்தமாக நிதிசார் அனுகூலமாக சுமார் 6 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரம் ஆகிய துறைகளில் நன்மதிப்புடைய பிரித்தானிய பட்டப்படிப்புக்களை வழங்க ஆரம்பித்த முதலாவது தனியார் உயர் கல்வி நிலையம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. 

ஐக்கிய இராச்சியத்திலுள்ள University of Westminster மற்றும் Robert Gordon Universityஆகியவற்றின் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கி வருகின்றது. 

உலகத்தரம் வாய்ந்த பட்டதாரிகளை தோற்றுவித்துள்ளதன் மூலமாக கடந்த காலங்களில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு வலுவூட்டுவதில் IIT முக்கியமான பங்கு வகித்துள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கு பங்களிப்பினை வழங்கி வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாகவும்ரூபவ் மற்றும் தகவல் தொழில்நுட்பவர்த்தகத் தொழிற்துறை சார்ந்தவர்களாகவும் மாறியுள்ளனர். ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை IIT உருவாக்கியுள்ளதுடன் உலகெங்கிலும் பல நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்களில் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.

InfoSchol திட்டம் தொடர்பாக கலாநிதி. காமினி விக்ரமசிங்க குறிப்பிடுகையில்,

“தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கற்கைகளை பொறுத்தமட்டில் இலங்கையில் பெருமளவான திறமையான மாணவர்கள் காணப்படுகின்றனர். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, போதியளவு வாய்ப்புகளின்மை காரணமாகரூபவ் அவர்களால் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்வர முடியாத நிலை காணப்படுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்கும் வகையில், IIT இனால் InfoSchol  திட்டம் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக திறமை வாய்ந்த மாணவர்களுக்கு தமக்கு விரும்பிய கற்கையை தொடரும் அதேவேளை, பெறுமதி வாய்ந்த தொழில் அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும்; வழங்கப்படுகிறது. 

இந்த புலமைப்பரிசில் திட்டத்தினூடாக மாணவர்களின் கற்கைச் செலவுகள் முழுமையாக ஈடுசெய்யப்படுவதுடன், தொழிற் பயிற்சியை பெற்றுக் கொள்வதுடன், குறிப்பிட்ட தொகையை வருமானமாகவும் பெற்றுக் கொள்ளலாம். நாட்டில் காணப்படும் முன்னணி நிறுவனங்களுடன் நாம் கைகோர்த்துள்ளதுடன்,  IIT இன் InfoSchol பட்டதாரிகளை தமது நிறுவனங்களில் இணைத்துக் கொள்வதில் இவர்கள் ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளனர்.” என்றார்.

இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் இணைந்து கொள்வதற்கான ஆகக்குறைந்த தேவையாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் C சித்தியுடன், க.பொ.த உயர்தர பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் 3 சித்திகளை பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2019 மார்ச் 31 ஆம் திகதியாகும். மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் www.iit.ac.lk / Admission / InfoSchol Scholarship எனும் பக்கத்தை பார்வையிடலாம். அல்லது 0112 360212 (Ext. 108), 077 820 9733,  076 820 9668 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம். 

ஆர்வமுள்ள மாணவர்கள் ஒன்லைனில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து infoschol@iit.ac.lk  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதனூடாக புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். அல்லது IIT க்கு தபால் மூலமாக “Infoschol 2019” எனும் தலைப்பில் Informatics Institute of Technology,  இல. 57, ராமகிருஷ்ணா வீதி, கொழும்பு 06 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் முடியும். ஆரம்ப இனங்காணல் செயற்பாட்டை தொடர்ந்து, தெரிவு செய்யப்படும் நபர்கள் பிரவேச பரீட்சையில் தோற்றுவதற்கு அழைக்கப்படுவார்கள். இதில் சிறப்பாக சித்தியெய்தும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதிலிருந்து 100 பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.