வலி.தென்மேற்கு கமநல சேவைகள் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளிடம் இருந்து 50 ஆயிரம் கிலோ நெல் (பெரும்போக) கொள்வனவு செய்யப்படவுள்ளது.

406,501 மற்றும் ஆட்டக்காறிநெல் இனங்கள் இவ்வாறுகிலோ 38 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக மானிப்பாய் ப.நோ.கூ.சங்கத்தின் தவிசாளர் மாரிமுத்து செல்வாராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரிவு 28 அலுவலர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்நா.வேதநாயகனின் ஆலோசனை அறிவுரையுடன் இந்த நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் ஒரு பதிவு செய்யப்பட்ட விவசாயிடமிரலந்து 2000 கிலோகிராம் அதிககூடிய அளவு கொள்வனவு செய்யப்படும் என்றும் கிலோ 38 ரூபா வீதம் முதற்கட்டமாக 50 ஆயிரம் கிலோ கொள்வனவு பணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி நடவடிக்கையில் எவ்வித தரகர் தொடர்பும் இருக்காது என தெரிவித்த தவிசாளர் மா.செல்வராகா விற்பனை செய்வதற்கு தயாராகவுள்ள சண்டிலிப்பாய் பிரிவு விவசாயிகள் உடன் சங்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 20 ஆம்திகதி முதல் இப்பணி துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.